நாடு நிலையான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை.
சர்வதேச விசாரணை வேண்டும் . சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக் கான தமிழர் செயற்பாட்டுக் மட்டக்களப்பு மாவட்ட குழு மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக சங்கம் , வர்த்தக சங்கம் , மாநகர சபை வரி இருப்பாளர் சங்கம் ,ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்கம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுர்க்கத்தின் முன்பாக மேற்கொண்டனர் .
இன்று இடம்பெற்ற கையெழுத்துப் போராட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் , சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக் கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எலன் சத்தியதாசன் , சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இதில் கையெழுத்தினை பதிவு செய்தனர் .
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )