செய்தி வாசிப்பாளர் வேலையைப் பெற இந்தப் பெண் என்ன காரியம் செய்துள்ளார் பாருங்கள்!
செய்தி வாசிப்பாளர் வேலையைப் பெற இந்தப் பெண் என்ன காரியம் செய்துள்ளார் பாருங்கள்!
அல்பேனியாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிரடியாக செயல்பட்டதன் மூலம் டிவி செய்தி வாசிப்பாளர் வேலையை படு சுலபமாக பெற்றுள்ளார்.கடும் போட்டிக்கு மத்தியில் இவரது துணிச்சலான அதேசமயம், படு கவர்ச்சிகரமான செயல் காரணமாக ஈஸியாக வேலை கிடைத்து விட்டது. இவர் வேறு ஒன்றும் செய்யவி்ல்லை. செய்தி வாசிக்கும் டெஸ்ட்டின்போது தனது மேலாடையை திறந்து மார்பகம் வெளியில் தெரியும்படியாக காட்சி தந்ததுதான். இப்படிச் செய்ததன் மூலம் அனைவரையும் அதிர வைத்து விட்டார். கூடவே வேலையையும் தட்டிச் சென்று விட்டார்.அல்பேனியாவைச் சேர்ந்த ஜார் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளர் வேலைக்கான ஸ்கீரினிங் டெஸ்ட்க்கு 21 வயதான என்கி பிராகாஜ் என்பவரும் வந்திருந்தார். இவரைப் போல பலரும் குவிந்திருந்தனர். போட்டி கடுமையாக இருந்தது.அப்போது என்கி தனது சுற்று வந்தபோது செய்தி வாசிக்கும் இருக்கையில் அமர்ந்ததும், தனது மேலாடையை நீக்கனார். இரு மார்பகங்களும் பாதி அளவு வெளியே தெரியும்படி விட்டுக் கொண்டு செய்தி வாசிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்தி வாசித்து முடித்து விட்டு எழுந்த என்கி பிளவுஸை மீண்டும் சரியாக மாட்டிக் கொண்டார். போட்டியில் அவரே வெற்றியும் பெற்றார். வேலை நியமனக் கடிதமும் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இதுகுறித்து சேனலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிச்சயம் அவரது செயல்பாடு சற்று அறுவெறுப்பாக இருந்தாலும் கூட அவரது ஸ்டைல், செய்தி வாசிக்கும் திறமை, துணிச்சல், சானலுக்கு அதிக நேயர்களை ஈர்க்கும் உத்தி ஆகியவற்றை நாங்கள் முதன்மையா கருத்தில் கொண்டோம். எனவேதான் வேலை கொடுத்தோம் என்று கூறினார்.எங்கி தனது செயல் குறித்துக் கூறுகையில் இது போட்டி நிறைந்த உலகம். ஏதாவது வித்தியாசமாக செய்தால்தான் வெல்ல முடியும். எனவேதான் இப்படிச் செய்தேன். முதலில் எனது பெற்றோருடன் பேசினேன். ஒத்திகையும் பார்த்தேன். அவர்கள் சரி என்று கூறி விட்டனர். இதையடுத்தே சேனலில் நடந்த டெஸ்ட்டின்போது அதுபோல நடந்தேன்.இதைத் தவறாக நான் கருதவில்லை. எனது இந்த வித்தியாசமான முயற்சிக்கு உண்மையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேனலுக்கும் ரேட்டிங் கூடியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியே என்றார்.