வழமையை போன்று நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்சவின் அருகில் உறங்கிய நிமல் சிறிபால டி சில்வா.
புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது முன்னாள் எதிர்கட்சி தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா வழமையை போன்று உறங்கியுள்ளார். எட்டாவது நாடாளுமன்றின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன, இதன் போது நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் அருகில் அமர்ந்திருந்தார்.குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது நிமல் சிறிபால டி சில்வா உறங்கியுள்ளார்.
அத்துடன் நிமல் சிறிபால டி சில்வா முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு உறங்குவதனை வழக்கமாக செய்து வருகின்றமையினால் அரசியல் துறையில் பிரபலமாக பேசப்படும் ஒருவராகிவிட்டார்.