Breaking News

நான் வேகமாக பயணம் செய்வதில்லை மெதுவாகவே பயணிப்பேன் ஆனால் பழைய நிலைமைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்.

நான் வேகமாக பயணம் செய்வதில்லை மெதுவாகவே பயணிப்பேன் ஆனால் பழைய நிலைமைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது ஆண்டு நிறைவு விழா பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இன்று 64ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் எனக்கு 63ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஞபகத்திற்கு வருகிறது. எமது 63ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் உங்களுக்கு ஞாபகமிருக்கும் வடமேல் மாகாணசபைத் தேர்தலின்போது குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியில் நடைபெற்றது. ஒரு வருடத்தினுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் 63ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் 64ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையிலும் ஒன்றாக அமாந்திருக்கின்றோம்.

எமது கடந்த கால தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்க்கின்றபோது, அடுத்த வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆட்சியமைப்பதற்கு நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளமைக்க வேண்டும். அரசியல் மீளமைப்புக்காக புதிதாக அமைப்புக்களை உருவாக்கி புதிய தலைமுறையுடன் இணைந்து புதிய உலகம் புதிய எண்ணங்கள் சிந்தனைகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகும். 
எம்.ஐ.அப்துல் நஸார்