Breaking News

கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து மாதகால தமிழ்மொழியை கற்ற சிங்களப் பொலிஸார் வெளியேறிச்செல்லும் நிகழ்வு‏.

மட்டக்களப்பு – கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஐந்து  மாதகால தமிழ்மொழியை கற்ற சிங்களப் பொலிஸார் 1400  பேர் வெளியேறிச்செல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லடியிலுள்ள பயிற்சிக் கல்லூரியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட  பொறுப்பதிகாரி D.I.G திசநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1400  பொலிஸார் பயிற்சியை முடித்துவெளியேறிச்சென்றனர்.

இந்தக் கல்லூரியில் இரண்டாம் மொழி தமிழைக் கற்று வெளியேறும் 11 வது  அணி இதுவாகும். இவர்களுக்கு ஐந்து  மாத காலம் சிறந்த தமிழ் மற்றும் சிங்களமொழி வல்லுனர்களாக   மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி க.பேரின்பராஜா, மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பயிற்சி பொறுப்பதிகாரி  எஸ் .ஐ .ரொமேஷ் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர் .

நிகழ்வில் மட்டக்களப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி அனுருத்த பண்டார ஹக்மன தமிழ் டிப்ளோமா பாட திட்ட பொறுப்பதிகாரி எ .எஸ் .பி . ஜினதாச, என் . ஐ .பி .லியனகே    உள்ளிட்ட பொலிஸ் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )