Breaking News

மட்டக்களப்பு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலய வருடாந்த திருவிழா.

மட்டக்களப்பு பனிச்சையடி அனைத்துலக  நாடுகளின்  அன்னை  ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலி   30.08.2015ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு  கல்முனை பாத்திமா கல்லூரி அதிபர் அருட்பணி  பிறையின் செல்லர் தலைமையில்  பங்குதந்தை  அருட்பணி ஜேசுதாசன் மற்றும் அருட்பணி நோட்டன் ஜோன்சன் ஆகியோர் இணைந்து திருநாள்  திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்  .

ஆலய திருவிழா கடந்த 21.08.2015 வெள்ளிக்கிழமை மாலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன்  தொடர்ந்து  நவநாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலை  அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது. 29.08.2015 சனிக்கிழமை  மாலை 05.30 மணிக்கு  ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் ,மறைவுரைகளும்  இடம்பெறவுள்ளதுடன்   அன்னையின் திரு உருவம் பவணி  வழமையான வீதிகளினுடாகஎடுத்துவரப்பட்டு  ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது  .

 30.08.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு கல்முனை பாத்திமா கல்லூரி அதிபர் அருட்பணி  பிறையின் செல்லர் தலைமையில்  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .  திருப்பலியின் பின்   ஆலய திருவிழா  கொடி இறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா  இனிதே நிறைவுபெற்றது. 
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )