149வது இலங்கை பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மாபெரும் சிரமதான பணி.
149 வது வருட இலங்கை பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிசாரினால் மாபெரும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது .
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி லொக்குகே வழிகாட்டலின் அமைவாக மட்டக்களப்பு சிறு குற்ற பிரிவு பொறுப்பதிகாரி எம்.பி .விஜேரத்ன தலைமையில் மட்டக்களப்பு திமிலதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வளாகத்தில் நேற்று மாலை மாபெரும் சிரமதான பணிகள் இடம்பெற்றன .
நேற்று இடம்பெற்ற சிரமதான பணிகளில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றும் திமிலதீவு கிராம பொது மக்களும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டனர்.
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )