Breaking News

கிரீஸ் அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு- 34 பேர் நீரில் கவிழ்ந்து பலி!

கிரீஸில் அகதிகளை ஏற்றிச் சென்ற மரத்தினாலான படகு சூறாவளியில் சிக்கி கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 15 குழந்தைகள் உள்பட 34 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து 125க்கும் மேற்பட்ட அகதிகள், மரத்தினாலான படகில் ஹங்கேரிக்கு ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்தனர். ஏதென்ஸ் அருகே சென்றபோது சூறாவளியில் சிக்கி அந்தப் படகு கடலில் கவிழ்ந்தது.

இதுகுறித்து கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையினர், "இந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 34 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 29 பேர் தாங்களாக நீந்திக் கரையை அடைந்தனர். படகில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததுதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும். கிரீஸ் அருகே சனிக்கிழமை கவிழ்ந்த மற்றொரு படகில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட அதில் பயணித்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.