ராம் சரண் படத்தில் குத்தாட்டம் போட இலியானாவுக்கு ரூ.1.5 கோடி சம்பளமா?
ராம் சரண் நடிக்கும் ப்ரூஸ் லீ தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இலியானாவுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் அளிக்கிறார்களாம். நடிகர் ராம் சரண் தேஜா ப்ரூஸ் லீ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். சீனு வைட்லா இயக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். படத்தில் ராம் சரண் ஸ்டண்ட் பார்ட்டியாக வருகிறாராம். அவரின் செல்லப் பெயர் தான் ப்ரூஸ் லீ ஆம்.
இந்நிலையில் பாலிவுட்டில் செட்டிலாகி வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும் இலியானாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ப்ரூஸ் லீ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளம் அளிக்க முன்வந்துள்ளார்களாம். பாலிவுட்டில் மவுசு இல்லாததால் மீண்டும் டோலிவுட்டுக்கு திரும்ப நினைத்திருந்தார் இலியானா. கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் பார்ட்டியில் இலி கலந்து கொண்டார். அப்போது மீண்டும் டோலிவுட்டுக்கு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு ப்ரூஸ் லீ படத்தில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ள படத்தின் பெயரும் ப்ரூஸ் லீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.