Breaking News

விரைவில் : அட்டகாசமான புதிய APPLE டிவி..!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியாக ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் டிவியை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ஆப்பிள் டிவியுடன் அடுத்த மாடல் ஐபோன்களான ஐபோன் 6எஸ் (iPhone 6S) மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் எஸ் (iPhone 6 Plus S) ஆகியவைகளும் வெளியாகும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது..!

வெளியாக இருக்கும் ஆப்பிள் டிவியானது ஆப் ஸ்டோர் (App store) மற்றும் சிரி (Siri) வசதியுடன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்பாராத பல விடயங்களை உள்ளடக்கி வெளியாக இருக்கிறது ஆப்பிள் டிவி என்பதும் குறிப்பிடத்தக்கது..!

மேலும் ஆப்பிள் டிவி சற்று உயரமாக மற்றும் தடிமனாக இருக்கும், அதாவது ஆப்பிள் டிவி உள்ளங்கையில் பொருந்தும்படியாகத்தான் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தற்போது ஐபோன்6-ல் பயன்படுத்தப்படும் ஏ8 சிப் (A8 Chip) தான் ஆப்பிள் டிவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் கசிந்துள்ளது. டிவி கேபில் சேவைக்கு மாற்றாக களம் இறங்கும் புதிய ஆப்பிள் டிவியின் விலை 150 முதல் 200 டாலர் வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது..!