Breaking News

பேன் தொல்லையை ஒழிக்க சில வழிமுறைகள்...

தலையில் பேன் பிடிப்பது, சாதாரன விஷயம், ஆனால் இது பலருக்கு பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. குறிப்பாக சிறு பிள்ளைகள், மற்றும் இளம்பெண்கள் பேனால் பதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர் இவற்றால் நோய்கள் பரவாவிடிலும், தலையில் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தலையில் கைவைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் நமது சுய மரியாதை சில இடங்களில் அடி வாங்குகிறது. சிறு விஷயமானாலும் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் இந்த பேன்கள் குறித்த ஒரு சிறு பார்வை இதோ... பேன்கள் என்பன, இறக்கைகளற்ற மனிதர்களை சார்ந்து(தலையில்) வாழும் ஒரு வகை ஒட்டுண்ணி. இவற்றின் பிரதான உணவு இரத்தம். கொசுக்களை காட்டிலும் மிகவும் சிறிய அளவு இரத்தமே இவற்றால் உறுஞ்சப்படுகிறது. இது மனிதனின் தலையில் சில வாரங்கள் வரை உயிர்வாழும். மனிதனை தவிற வேறு உயிரிகள் மீது இது ஒட்டி வாழாது. தலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இது 48 நாட்களுக்குள்ளாக இறந்துவிடும். இவற்றால் மனிதர்களுக்கு எந்த வித நோயும் உருவாகாது என்றாலும், இவை தலையில் மேர்பரப்பில் அதிகமாக சுரண்டுவதால் எரிச்சல், மற்றும் சிறிய காயங்கள் ஏற்படலாம். பொதுவாக ஒரு ஆரோக்கியமான, சாதாரன நபரது தலையில் 10 முதல் 15 உயிருள்ள பேன்கள் வரை இருக்கலாம். இது, அவரது குளியல் எடுத்துக்கொள்ளும் இடைவெளி, உபயோகிக்கும் ஷாம்பு அல்லது சோப்பு, இவற்றை பொருத்து மாறும். சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் விளையாடுவது, மிக விரைவாக அழுக்காவது மற்றும் சீப்பு, தொப்பி போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்றவற்றால் சிறுவர்கள் தலைகளில் மிக எளிதாக பேன்கள் உருவாகும். இவற்றை அடிக்கடி தலையை சுத்தம் செய்தால் மற்றும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் தலை துவட்ட பயன்படுத்தும் துண்டு, மெத்தை, தலையனை, தொப்பி போன்றவற்றை அழுக்கு சேராமல் பார்த்து கொள்வதன் மூலம் தவிற்கலாம். இவற்றை கட்டுபடுத்த பிரத்யேக ஷேம்பூ, சோப் மற்றும் எண்ணெய் போன்றவை உள்ளன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக பேன்களை கட்டுப்படுத்தலாம். இவை மனிதரில் வாழ்வதற்காகவே பரிணமித்துள்ளவை. எனவே எவ்வளவு சுத்தமாக இருப்பினும், இவை மிக எளிதாக தலையில் தொற்றக்கூடிய வாய்ப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு பேன்கள் எளிதில் பரவும் என்பதால், குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தொப்பி, உடைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிற்குமாறு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.