சுகாதார சேவையின் சகல கடமைப்பு தொடர்பிலும் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்படும் ஜனாதிபதி.
சுகாதார சேவையின் சகல கடமைப்பு தொடர்பிலும் அரசாங்கம் மிகவும் அவதானத்துடனும் அக்கறையுடனும் செயற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவர்களின் வருடாந்த சம்மேளன மாநாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு வைத்தியர் குழுவினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் www.criticalcare.lk இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுகாதார சேவையின் உள்ள முக்கிய வளங்கள், உரிய முறையில்; முகாமைத்துவப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கருத்து வெளியிட்டார்.இலவச சுகாதார சேவையின் பிரதான பொறுப்பானது இருக்கின்ற வளங்களை உரிய முறையில் முகாமைத்துவப்படுத்துவதாகும்.
இவ்வாறு உரிய முறையில் முகாமைத்துவப்படுத்தும் பட்சத்தில் நாங்கள் எதிர்பார்த்த இலக்குகளை இலகுவாக எட்ட முடியும். எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும், மிகசிறந்த மருத்துவ மற்றும் சுகாதார சேவை காணப்படுகின்றது.
இந்தநிலையில் எங்களது வளங்கள் பகிரப்படும் போது, நகர பகுதிகளை போன்று கஸ்டபிரதேசங்கள் மற்றும் கிராம புறங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






