Breaking News

தன்னை செக்ஸ் அடிமையாக்கிய ஐஎஸ் தலைவரை சுட்டுக் கொன்ற பெண்மணி

ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு அனஸ் அவரால் செக்ஸ் அடிமையாக்கப்பட்ட பெண் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பெண்கள், சிறுமிகளை கடத்தி செக்ஸ் அடிமைகளாக்குகிறார்கள். மேலும் அவர்களை செக்ஸ் அடிமை சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் அபு அனஸ் ஈராக்கின் தால் ரோமன் மாவட்டத்தில் ஒரு பெண்ணால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யசிதி இனத்தைச் சேர்ந்த அந்த பெண் தன்னை செக்ஸ் அடிமையாக்கியதற்காக அபு அனஸை கொலை செய்துள்ளார். அபு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பல தீவிரவாதிகளின் மனைவியாக்கியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்ய மறுத்ததற்காக கடந்த ஜூலை மாதம் 19 பெண்களும், கடந்த மாதம் 15 பெண்களும் கொலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு மட்டும் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த யசிதி இனத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்து 270 பேரை கடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் தாங்கள் கடத்தி வரும் பெண்களை செக்ஸ் அடிமை சந்தைக்கு அழைத்துச் சென்று அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து விற்பனை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.