Breaking News

சேதனப் பசளை முறையிலான பயிர்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பெண்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  “அகம் “நிறுவனம்  பெண்களுக்கான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .

இதன் கீழ்  சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின்   சேதனப் பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக ஒரு நாள் பயிற்சி நெறி “அகம் “நிறுவனத்தின்  இணைப்பாளர் தங்கராசா திலீப்குமார் ,  தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  விவசாய திணைக்களத்தில்  இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியில்  வெல்லாவெளி , பட்டிப்பளை , வாகரை , கிரான் ,வவுணதீவு ஆகிய பிரதேசங்களில்   சேதனப்  பசளை முறையில்  பயிர் செய்கையினை மேற்கொண்டுள்ள பயனாளிகளில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு  சேதனப் பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்   வளவாளர்களாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  விவசாய திணைக்கள போதனாசிரியர்  டி .பிரதீபன் , டி .ரமேஷன் . என் . பார்த்திபன்   ஆகியோரினால் பயிற்சிகள் அளிக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  நிறுவன திட்ட இணைப்பாளர்  திருமதி எஸ் . நிரஞ்சினி  நிறுவன கள உத்தியோகத்தர்கள்   மற்றும்  பயனாளிகளும்  கலந்துகொண்டனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)