மட்டக்களப்பு திருகோணமலை வீதி முதியோர் இல்லத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .இதன் கீழ் மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்கம் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு திருகோணமலை வீதி உள்ள முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் முதியோர் இல்ல வயோதிபர்களும் மற்றும் மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்கம் பாலர் பாடசாலை சிறார்களும் கலந்துகொண்டதுடன் இவர்ககளது வினோத நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்கம் உறுப்பினர்கள் , பாடசாலை சிறார்கள் , ஆசிரியர்கள் ,முதியோர் இல்ல வயோதிபர்கள் , இல்ல உறுப்பினர்கள் மற்றும் அருட்சகோதரிகளும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)