Breaking News

ஹேடன் நேஷனல் வங்கியின் கிழக்கு பிராந்திய கிளைகளின் 2015 ஆண்டுக்கான விளையாட்டு விழா


ஹேடன் நேஷனல் வங்கியின்  கிழக்கு பிராந்திய கிளைகளின் 2015 ஆண்டுக்கான   விளையாட்டு விழா ஹேடன் நேஷனல் வங்கி பிரதி பொது முகாமையாளர் திமால் பெரேரா தலைமையில்  நேற்று  மட்டக்களப்பு முகத்துவாரம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது .

இடம்பெற்ற  2015 ஆண்டுக்கான  விளையாட்டு விழாவில்  கிழக்கு பிராந்தியத்தில்  மூன்று மாவட்டத்தையும்  சேர்ந்த 24  கிளைகளின்  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .

இவ்  விளையாட்டு விழாவில்  கிரிகெட் , உதைப்பந்தாட்டம் , கயிறிழுத்தல் மற்றும்  பல சுவாரசியமான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன .
இன்று இடம்பெற்ற  விளையாட்டு விழாவில்  முதல் போட்டியாக  கிழக்கு பிராந்திய கிளை அணிகளுக்கிடையில் கிரிகெட்  சுற்றுப்போட்டி ஆரம்பமானது .

இடம்பெற்ற  கிரிகெட்  சுற்றுப்போட்டியில்   ஆண்கள் பிரிவில் கல்முனை கிளை அணியினரும் ,பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு  கிளை அணியினரும் வெற்றி பெற்றனர் . தொடர்ந்து இடம் பெற்ற   உதைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை  மாவட்ட கிளை அணியினர் வெற்றி பெற்றனர் .  அதனை தொடர்ந்து ஆரம்பமான கயிறிழுத்தல் போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட கிளை அணியினரும் ஆண்கள் பிரிவில் திருகோணமலை மாவட்ட கிளை அணியினரும்  வெற்றி  பெற்று   2015 ஆண்டுக்கான  வெற்றி கிண்ணங்களை சுவிகரித்துக்கொண்டனர் .
இவ்விளையாட்டு விழாவில்  வலையமைப்பு  உதவி பொது முகாமையாளர் ரோஹான்  தம்பிராஜா ,கொழும்பு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் . நிரோசன் பெரேரா ,மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் சுபுன் டயஸ் ,கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் .சி . ஜெகராஜா மற்றும் கிழக்கு பிராந்திய கிளைகளின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .