யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு ஜப்பான் ஆதரவு.
யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணத்துவம் கொண்ட ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதி மோடோ நொகுச்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் அனுமதியுடன் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக உள்ளகப் பொறிமுறையினை செயற்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவளிப்பது சம்பந்தமாக தெரியப்படுத்துவதற்காக அவர் வருகை தந்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கம்பூச்சியாவின் யுத்தக் குற்ற வழக்குகள் தொடர்பில் செலாற்றிய நொகுச்சி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் இங்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்காதீப – தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார்.