Breaking News

மீண்டும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்தராஜபக்ஷ.

கடந்த 23ம் திகதி மரிஹானையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்படடிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மீண்டும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைகாட்சியில் ஒளிபரப்பான அவரது விளம்பரங்களுக்கு 200 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படாதுள்ளது. இது தொடர்பில் அவரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர் அவ்விடயம் தொடர்பான விசாரரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.