Breaking News

வரைபடங்களுடன் கைதான புலி உறுப்பினரின் பூஸா தடுப்புமுகாமில் தடுப்புக்காவலில்.

வெடிபொருட்களுடன் ஆயுதங்களையும் கொண்டுவந்து மிக முக்கிய நபர்களைக் கொலை செய்வதற்காக, கொழும்பு புறநகர் மற்றும் நகரின் முக்கிய மையங்களின் வரைபடங்களை வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்ட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மேஜரொருவரை, நவம்பர் மாதம் 24ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யசேகர உத்தரவிட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரான தங்கவேலு நிமலநாதன் என்பர் மீது,  சட்டமா அதிபர் 3 வழக்குகளைப் பதிவுசெய்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி முன்னிலையில் நேற்று புதன்கிழமை (21) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வழக்கு நவம்பர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த நபர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து பூஸா தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில், வழக்குரைஞர் என்.ஸ்ரீகாந்தன் வழிகாட்டலில் வழக்குரைஞர் எஸ். பஞ்சாட்சரம் ஆஜரானார்.