நாட்டில் தொடரும் அசாதாரண காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து வெஹெரகல நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் நேற்றிரவு திறக்கப்பட்டன. இதன்காரணமாக, மாணிக்க கங்கையை அண்மித்த மக்களும், ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானமாக செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை. அதிக மழையால் மஸ்கெலிய ஓய பெருக்கெடுத்ததன் காரணமாக சாமிமலை கவரவில குடியிருப்பைச் சேர்ந்த 20 வீடுகள் வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக. இந்தநிலையில், நாட்டின் பல பாகங்களில் இரவு நேரங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடி மின்னல் அதிகரித்து காணப்படுவதால் அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.



