Breaking News

கரித்தாஸ் எகெட் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள்‏.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரித்தாஸ் எகெட்  நிறுவகம் நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில்   மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டி நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகின்றது.

இதன் கீழ்  மட்டக்களப்பு  வலய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட பாடசாலை  மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள் கரித்தாஸ் எகெட்  நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இப்போட்டிகள்  டயக்கோஸியா நிறுவன நிதி உதவியுடன்   கரித்தாஸ் எகெட்  நிறுவகம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தி வருகின்றது. இன்று இடம்பெற்ற போட்டிகளில்  மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட  பாடசாலை மாணவர்கள்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்  டயக்கோஸியா நிறுவன திட்ட உத்தியோகத்தர் பி.எ.செல்லத்துரை , நிறுவன திட்ட ஊக்கு விப்பாளர்கள் ,  பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)