"முத்தான வியர்வை" எனும் தொனிப்பொருளில் சுயதொழில் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் நாவற்குடாவில்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் "முத்தான வியர்வை" எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும திணைக்கள பணிப்பாளர் .பி .குணரட்ணம் தலைமையில் மட்டக்களப்பு நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி ஊடாக பயன்பெறும் பயனாளிகளின் சுயதொழில் உற்பத்தி திறன்களை அதிகரிக்கும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் சுயதொழில் உற்பத்திகளின் விற்பனையும் வர்த்தக கண்காட்சியும் இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற நிகழ்வில் சுயதொழில் உற்பத்திகளான கால்நடை உற்பத்திகள் , வீட்டுத்தோட்டம் , உலர் உணவு பொருட்கள் , தைத்த ஆடைகள், மண்பாண்டம், மற்றும் பனையோலைகளின் உற்பத்தி பொருட்கள் போன்ற பல்வேறு பட்ட சுயதொழி உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டதோடு விற்பனை செய்யப்பட்டது. இதேவேளை இங்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகள், வாழ்வின் எழுச்சி வலய வங்கி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி வங்கி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)


