தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை தொடர்ந்து பொதுச் செயலாளர் பிரசாந்தனும் கைது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அதிகாலை 3.10 அளவில் காத்தான்குடி பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, இவரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக்காவில் வைக்க நீதவான் அனுமதி வழங்கியதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

கடந்த 2008 ஆம் டிசம்பவர் மாதம் 13 ஆம் திகதி ஆண்டு ஆரையம்பதியில் இடம் பெற்றதாக கூறப்படும் இரட்டை கொலை சம்பவம் தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.