சிட்டி ஒப்டிகல் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறை மட்டு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் திறந்து வைப்பு.
கடந்த 8 வருட காலமாக காத்தான்குடி பிரதேசத்தில் பொது மக்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் கண் பரிசோதனை போன்ற சேவைகளை சிறப்பாக வழங்கி வரும் சிட்டி ஒப்டிகல் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறை மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக இன்று 26 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறையை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
சிட்டி ஒப்டிகல் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் உரிமையாளர் கண் பரிசோதகர் எஸ்.எம்.சமீல் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் ,வர்த்தக ஸ்தானங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறை திறப்பு விழாவை முன்னிட்டு காத்தான்குடி முதியோர் இல்லத்திலுள்ள கண் பார்வை குறைவுள்ள சிலருக்கும்,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கும் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று 26 நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கி வைக்கப்பட்டது.
குளிரூட்டப்பட்ட குறித்த மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தில் கணணி மயப்படுத்தப்பட்ட கண் பரிசோதனை,பயிற்றுவிக்கப்பட்ட கண் பரிசோதகர்கள் மூலம் கண் பரிசோதனை,பல விதமான மூக்குக் கண்ணாடிகள்,சன் கிளாசுகள்,வாசிப்பதற்கு உகந்த மூக்குக் கண்ணாடிகள்,கண் வில்லைகள் (லென்ஸ்),துரித கெதியில் கண் வில்லைகளை மூக்குக் கண்ணாடியில் பொறுத்திக் கொடுத்தல் போன்ற சேவைகளை பொது மக்கள் பெற முடியுமென சிட்டி ஒப்டிகள் மூக்குக் கண்ணாடி ஸ்தாபனத்தின் நவீன காட்சியறையின் பொறுப்பாளர் செட்.எம்.சஜி தெரிவித்தார்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-


