Breaking News

உளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள்.

உளவளத்துணை பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய உளவளத்துணை தின விழிப்புணர்வு நிகழ்வுகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன் ஒரு நிகழ்வாக “உன்னதமான உள நலத்தை நோக்கிய உளவளத்துணை“ எனும் தொனிப்பொருளில்   விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில்  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. உளவளத்துணை  தொடர்பாக விழிப்புணர்வுகளையும் அது தொடர்பாக கருத்துக்களையும்  வழங்குவதற்கான கலந்துரையாடல்  மண்முனை வடக்கு பிரதேச செயலைக அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குமான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய  பிரதேச செயலாளர் கூறுகையில் பொது மக்களுடன் சேர்ந்து பல்வேறு பட்ட விடயங்களில்  களத்திலே இருந்து அவர்களின் மனநிலைக்கு ஏற்ப கடமைகளை செய்பவர்கள்  அரச  உத்தியோகத்தர்கள். எனவே பொது மக்களின் மனநிலை அறிந்து அவர்களின்  தேவைகளை பூரண திருபத்தியுடன்  செய்வதற்கு மனநிலை பக்குவம் தேவை அதனை இந்த உளவளத்துணை விழிப்புணர்வு  ஏற்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உளவளநலத்துறை உத்தியோகத்தர் திருமதி யு.சுபாநந்தினி, வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர் வைத்தியர்  டி.கடம்பநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்.