42 இலட்சத்திற்கும் அதிகமான பாடசலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
அனைத்து பாடசாலை மாணவர்களும் இலவச சீருடைகளை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வயது எல்லையின் பிரகாரம் குறித்த வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.பந்துசேன குறிப்பி்ட்டுள்ளார்.
அதிபர்களின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுசர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் 42 இலட்சத்திற்கும் அதிகமான பாடசலை மாணவர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 42 இலட்சத்திற்கும் அதிகமான பாடசலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
- A.D.ஷான் -
- A.D.ஷான் -



