தடை நீக்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் குறித்த விபரம் விரைவில் கிடைக்கும்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ள அறிக்கையில் தடை நீக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் குறித்த விபரம் இன்று அல்லது நாளை தகவல் கிடைக்கப் பெறலாம் என தெரிவித்துள்ளது.
இதில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு 2014ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட 424 பேரில் 269 பேரினதும் மற்றும் எட்டு தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.



