Breaking News

வீட்டுக்குள் வெள்ளம் வீட்டு மீன்தொட்டியாய் போன சென்னை வீடுகள் அழையா விருந்தாளிகளான பாம்புகள்.

வீடுகளில் மீன் தொட்டி வைத்து மீன் வளர்பார்கள்... ஆனால் மழை வெள்ளத்தினால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்திருக்க... அந்த தண்ணீரில் மீன் வளர்க்கின்றனர். அதனை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கின்றனர் சிலர். 

மழை தண்ணீர் வீடுகளில் புகுந்துவிட அதில் பாம்பும், மீன்களும் அழையா விருந்தாளிகளாக குடியேற அவற்றுடனேயே வாழ பழகிக்கொண்டனர் பெரும்பாலான சென்னைவாசிகள். சமையல் அறையில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலும் வேறு வழியின்றி அதில் நின்றுதான் சமைக்க வேண்டியிருக்கிறது. சேர்களில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு... வீட்டு முன்பாக வரும் போட்டில் ஏறி அலுவலகம் செல்கிறோம் என்று மழைக்கால சங்கடங்களைக்கூட சந்தோசமாக பகிர்ந்து கொள்கின்றனர் தோழிகள். 

ஆசை ஆசையாக பார்த்து வாங்கிய வீடு... மழை, வெள்ளத்திற்காக அதை விட்டு எப்படி வெளியேறுவது என்று கேட்கின்றனர் சிலர். அதனால்தான் சங்கடங்கள் வந்தாலும் சந்தோசத்தோடு வாழ்கிறோம் என்றும் கூறுகின்றனர்.