இணையத்தில் இப்படிச்செய்து இலட்சங்களை குவிக்கும் சகோதரிகள்
இணையத்தில் இப்படிச்செய்து இலட்சங்களை குவிக்கும் சகோதரிகள்
இணையத்தில் தொடர்ச்சியாக தங்களது படங்களை தரவேற்றி வரும் சகோதரிகள் மூவர் இதன் மூலம் பல இலட்சம் பெறுமதியான பரிசில்களை பெற்றுவருவதாக தெரிவிக்கின்றனர். லூசி, சோபி, ஸ்டெகி புரூக்ஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த 3 சகோதரிகளே இவ்வாறு பரிசில்களை பெற்று வருகின்றனர். இவர்கள் தங்களது படங்களை இணையத்தில் போடுகின்றனர்.
இதற்கு பதிலாக முகம் தெரியாவத பலரிடம் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பரிசில்களை பெற்றுவருகின்றனர். பல்வேறு ஆண்கள் , தாம் நேரில் சந்திக்காத, இணையத்தில் காணும் பெண்களுக்கு பரிசில்களை வாரி வழங்கும் கலாசாரமொன்று இங்கிலாந்தில் பரவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டிசைனர் உடைகள் , காலணிகள், ஐபேட்கள் , கைப்பைகள் , மலர்கள் , பரிசில் வவுச்சர்கள் என பலவற்றை இச் சகோதரிகள் பரிசில்களாக பெறுகின்றனராம்.
தாம் செய்வதில் தவறில்லை எனக் கூறும் அச்சகோதரிகள் , தாம் எல்லை மீறுவதில்லையெனவும் , தங்களது பட த்தினை விரும்பும் ஆடவர்கள் தங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களின் தாயும் , இவர்கள் செய்வதில்லை தவறெதுவும் இல்லையெனவும் , விரும்புகின்றவர்கள் , பரிசலிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்



