Breaking News

என்னை எப்படி தடுக்கலாம் நீங்க.. சீனா மீது பாய்ந்த கனடா அழகி

மிஸ் கனடா பட்டம் வென்றவரான அனஸ்தஸியாவை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள சன்யா என்ற தீவுக்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது. இதனால் சீன அரசைக் கடுமையாக கண்டித்துள்ளார் அனஸ்தஸியா. சீனாவில் பிறந்தவர் தான் இந்த அனஸ்தஸியா. இவரது முவுப் பெயர் அனஸ்தியா லின். 25 வயதான இவர் நடிகையும் ஆவார். கடந்த மே மாதம் மிஸ் கனடா பட்டம் வென்றார். சன்யா என்ற நகரில் மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளவுள்ளார் அனஸ்தஸியா. அதற்குத்தான் சீனா தடை போட்டு விட்டது. இதுகுறித்து ஹாங்காங்கில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சீன அரசின் தடை நியாயமற்றது, அர்த்தமற்றது என்று சாடியுள்ளார்.