Breaking News

பாவம், சண்டையெல்லாம் போடறாங்க... சினிமாவில் ஆணாதிக்கம் இருந்துட்டுப் போகட்டும்! - அனுஷ்கா

ஹீரோக்கள் சினிமாவில் சண்டையெல்லாம் போட வேண்டியிருக்கு.. அதனால் ஆணாதிக்கும் இருந்துவிட்டுப் போகட்டும், தவறில்லை என்று அனுஷ்கா கூறியுள்ளார். ஆர்யா - அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படம் இன்று உலகெங்கும் வெளியானது. தெலுங்கில் இந்தப் படம் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியானது. பட வெளியீட்டையொட்டி நாயகி அனுஷ்கா அளித்த பேட்டி:

‘பெண்களில் பலர் வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக உடற்பயிற்சி, யோகாவே கதி என கிடந்து உடலை வருத்துகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனதை அழகாக வைத்து இருப்பதைத்தான் பெரிதாக நம்புகிறேன்.