மது போதையில் வாகனம் செலுத்திய 306 சாரதிகள் கைது
சாரதிகள் 306 பேர் மது போதையில் வாகனம் செலுத்தியமயால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் 23ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்றது. இதன்படி நேற்று 26ஆம் திகதி காலை 6 மணிவரை மொத்தமாக 306 பேர் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ்பிரிவு அறிவித்துள்ளது



