பட்டப் பின் படிப்பு நிலையத்தில் அரபுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்.
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இயங்கிவரும் பட்டப் பின் படிப்பு நிலையத்தில் அரபுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கு 2016ம் ஆண்டுக்கு புதிய மாணவர் அனுமதிக்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் டப்ளீயூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
மேற்படி கல்வி நிலையத்தில் எதிர்வரும் 2016 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் மூன்றாவது குழுமத்தின் பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கற்பித்தல்,அழைப்புப் பணி போன்றவற்றில் திறமையாக செயல்படவும்,பிரகாசமான தொழில் துறை,மேற்படிப்பு வாய்ப்புக்களைப் பெறவும் வசதியாக பாரம்பரிய ஷரீஆக் கலைகளையும் நவீன கல்விசார் துறைகளையும் உள்ளடக்கி இப் பாடத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த பட்டப் பின் படிப்பு நிலையத்தில் சேர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரபுக் கலாசாலையில் பட்டம் பெற்றிருத்தல்,இறுதிப் பரீட்சையில் மிக நன்று தரம்,புனித குர்ஆனில் குறைந்தது 5ஜூஸ்உகள் மனனம்,அரபு மொழியை சிற்ப்பாக கையாளும் திறமையும் அடிப்படை ஆங்கில மொழியறிவும் ,வார இறுதி நாட்களில் முழுமையாக தங்கிக் கற்க முடியுமானவராயிருத்தல் போன்ற விடயங்கள் தகைமைகளாக கருதப்படும்.
இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சகல வசதிகளையும் கொண்ட கல்விச் சூழலுடன் அரபு நாட்டைச் சேர்ந்த ஓர் அறிஞரின் நேரடிக் கண்காணிப்பு,கணணி மயப்படுத்தப்பட்ட சுய கற்கை முறைக்க ஊக்குவிப்பு,வாராந்தல் சனி,ஞாயறில் மாத்திரம் நடைபெறும் பயிற்சி நெறி,மாதாந்தம் 5000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன் வாராந்தப் போக்குவரத்துச் செலவு,இறுதிப் பரீட்சையில் அதி விஷேட தரத்தில் சித்தியடையும் மாணவருக்கு முற்றிலும் இலவச உம்றா,இறுதிப் பரீட்சையில் திறைமையாக சித்தியடையும் மாணவர்களுக்கு அரபுப் பல்கலைகழகமொன்றில் உயர் கல்வி வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முயற்ச்சிக்கான உத்தரவாதம் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
மேற்படி பட்டப் பின் படிப்பு நிலையத்தில் சேர விரும்புவோர் 01-01-2016 திகதிக்கு முன்னர் தங்களுடைய சுய விபரத்துடன் விண்ணப்பங்களை பட்டப் பின் படிப்பு நிலையம் -இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தபால் பெட்டி இலக்கம் 105-காலி என்ற முகரிக்கு அனுப்பும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0777921418, 0771764982, 0779119161 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-




