கிழக்கு மாகாணத்தில் 68 எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
68 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் எச்.ஐ.வி. தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர், கே.முருகானந்தன் தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சமமான தொகையினருக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ளன. இதில், ஆண் பெண் இரு பாலாரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.