திருகோணமலை கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை நடாத்தவும். கோட்டை நீதிமன்றம் !
ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை தொடர்ந்து திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கிவந்த நிலக்கீழ் ரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிசார் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர். தற்போது குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.