அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள்..!!
அமெரிக்காவின் டிஃபென்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜென்சி நிறுவனமான டார்பா அந்நாட்டிற்கு தேவையான ஆயுத தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் படி அந்நிறுவனம் பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரித்து வருகின்றது.
தோட்டா
எக்ஸ்ட்ரீம் அக்யூரசி டாஸ்க்டு ஆர்டினனஸ் எனப்படும் ராணுவத்தின் முதல் செல்ஃப்-கைடடு புல்லட் வகைகளை டார்பா தயாரித்து வருகின்றது. இந்த வகை புல்லட்கள் பயணிக்கும் பாதையை மாற்றக்கூடிய திறன் கொண்டிருக்கின்றது.
லேசர்
டார்பாவின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்று தான் ஹை எனர்ஜி லிக்விட் லேசர் ஏரியா டிஃபென்ஸ் சிஸ்டம் (HELLADS). இந்த திட்டமானது லேசர் மூலம் எவ்வித விமானங்கள் மற்றும் வாணில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை செயல் இழக்க செய்யும் திறன் கொண்டவையாகும். இந்த திட்டத்தில் லேசர்களின் செயல் திரனினை மேலும் அதிகரிக்க டார்பா தற்சமயம் திட்டமிட்டு வருகின்றது.
பறக்கும் ட்ரக்
ஏஆர்ஈஎஸ் (ARES) திட்டத்தின் மூலம் டார்பா பறக்கும் கார் போன்ற வாகணத்தினை உருவாக்கவே திட்டமிட்டது. அதன்படி இவ்வகை வாகணங்கள் தரையில் பயணிப்பதோடு அதிவேகமாக காற்றில் பறக்கவும் செய்யும். மேலும் வாண்வெளி தாக்குதல்களை சமாளிக்கும் தொழில்நுட்பம் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று எனலாம்.
ரோபோடிக் பேக் விளங்குகள்
போர்களத்தில் பீமன் போன்று செயல்படும் அதிநவீன நீன்கு கால் கொண்ட ரோபோட் தான் டார்பாவின் லெக்டு ஸ்குவாட் சப்போர்ட் சிஸ்டம் ஆகும். ராணுவ வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக இவ்வகை ரோபோட்கள் அதிக எடையை சுமந்து நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டிருக்கின்றது. தற்சமயம் இவை சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒன் ஷாட் டார்பாவின்
ஒன் ஷாட் எக்ஸ்ஜி திட்டமானது ஆயுத சீரமைப்பு மற்றும் லைனக்ஸ் சார்ந்த கணினி மூலம் இலக்குகளை சரியாக கணிக்க உதவுகின்றது. இதனால் துப்பாக்கியை பயன்படுத்துவோர் குறியை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும்.
க்ளோஸ் ஏர் சப்போர்ட்
டார்பாவின் பெர்சிஸ்டென்ட் க்ளோஸ் ஏர் சப்போர்ட் திட்டமானது பல்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்க வழி செய்யும். இந்த திட்டமானது கன நேரத்தில் பலருடன் தகவல்களை பறிமாறி கொள்ள வழி செய்கின்றது.
போல்ட்
ப்ராட் ஆப்பரேஷனல் லாங்குவேஜ் டிரான்ஸ்லேஷன் திட்டம் தகவல் பறிமாற்றத்தை மிகவும் எளிமையாக்கும். மற்றவர்கள் எந்த மொழியில் உரையாடினாலும் அதனினை கன நேரத்தில் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.
டிரோன்
உலகின் பிரபல போயிங் நிறுவனம் தாணியங்கி டிரோன் வகைகளை தயாரிக்கின்றது. டார்பாவின் வென்ச்யூர் 2 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் இவ்வகை டிரோன்கள் சூரிய சக்தி மூலம் சக்தியூட்டப்படுவதால் வாண்வெளியில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பறக்க முடியும்.
புகைப்படம்
விண்கலங்களுடன் தொடர்பு கொண்டு கன நேரத்தில் தேவைப்பட்ட புகைப்படங்களை பெறும் திட்டம் தான் டார்பாவின் ஸ்பேஸ் எனேபில்டு எஃபெக்ட்ஸ் ஃபார் மிலிட்டரி என்கேஜ்மென்ட்ஸ் (SeeMe).












