Breaking News

செவ்வாய்க்கு பறக்கணுமா அப்ளை பண்ணுங்க!

விண்வெளி வீரராக மாறி, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பவர்களின் கனவை நினைவாக்க நாசா ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆம், விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. 

இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த அமெரிக்காவின் நான்கு விண்வெளி திட்டங்களில் ஏதாவது ஒன்றில் பணி புரியும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

அதாவது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்குப் போய் ஆய்வு மேற்கொள்ளலாம், இரு அமெரிக்க நிறுவனங்கள் தற்போது உருவாக்கி வரும் இரண்டு வர்த்தக ரீதியிலான விண்கப்பல்களில் பயணிக்கலாம் மற்றும் நாசாவின் ஓரியான் விண்கலம் மூலம் செவ்வாய்க்குப் பயணிக்கும் வாய்ப்பையும் பெறலாம்.