கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்காக முதலமைச்சருக்கும் ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பின் போது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களங்களின் மூலம் மூன்று மாவட்டங்களின் மாநகர சபை , நகரசபை , பிரதேச சபைகள் ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்காக நேற்று 09.12.2015 நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் . கோபாலகுமார் தம்பி மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஏ. சுபாகரன் , மாகாணசபை உறுப்பினர் ஜவாத் , முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சமந்த அபேவிக்கிரம , ஆசியா பவுண்டேசன் திட்ட முகாமையாளர் எம் .ஐ . எம். வலீத், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது .
இக் கலந்துரையாடலின் போது மாவட்டங்களில் உள்ள வைத்திய சாலைகள் , பஸ் போக்குவரத்து சேவைகள் , விளையாட்டு துறை , கைத்தொழில் முயற்சியாளர்களின் ஊக்குவிப்பு , இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்தி முன்னெடுப்புகள் சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டி காட்டியற்கு அமைவாக இவ்வாறான துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு ஆசியா பௌண்டேசன் முன்வந்துள்ளது .


