சர்வதேச எச்.ஐ.வி எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு தேசிய எயிட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில்.
சுகாதார அமைச்சும் தேசிய பாலியல் மற்றும் எச்.ஐ.வி. எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையமும் இணைந்து ஏற்பாடுசெய்த தேசிய எயிட்ஸ் தின நிகழ்வு இன்று காலை காந்தி பூங்கா அருகில் இடம்பெற்றது. தேசிய எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் "எச்.ஐ.வி தொற்றுள்ள எல்லோருக்கும் சிகிச்சை உண்டு" எனும் தொனியில் காந்திப்பூங்கா அருகில் இருந்து காலை ஆரம்பமானது.
இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் வைத்திய பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், சர்வமத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர், சிறைக்கைதிகள், இளைஞர்கழக உறுப்பினர்கள், அரச அலுவலக அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



