Breaking News

New Horizons எடுத்த புளூட்டோவின் தெள்ளத் தெளிவான படம்...!

New Horizons விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. 

சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ்.