எட்டு வருடங்களுக்கு மேலாக மண நிலை பாதிப்புற்று கல்லடி பகுதி வீதிகளில் அலைந்து கொண்டிருந்த பெண்னொருவருக்கு சிகிட்சை அளிக்க அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் கிராம சேவை பிரிவில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மண நோயாள பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டக்களப்பு நீதி மன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக மண நிலை பாதிக்கப்பட்டு தனது வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் சுற்றித்திரிந்த நிலையில் இருந்த கல்லடி வேலூர் கிராம சேவை பிரிவை சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவ சிகிட்சை அளிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு கல்லடி சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட முறைபட்டுக்கு அமைய காத்தான்குடி பொலிசாரின் உதவியுடன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு மருத்துவ சிகிட்சை அளிப்பதற்காக அனுமைதியை பெற்றுக்கொள்ளும் முகமாக மட்டக்களப்பு பிரதான நீதி மன்றத்தில் நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார் .
நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுதியத்தை தொடர்ந்து மட்டக்களப்பு பிரதான நீதி மன்ற நீதிவானின் உத்தரவுக்கு அமைய மண நோயால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு சிகிட்சை அளிக்க அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .
நீதவானின் உத்தரவுக்கு அமைய அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்லடி சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் டி . பிரான்சிஸ் தெரிவித்தார் .



