தர்மதுரையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாவும் நடிக்கல, குத்தாட்டமும் போடல! - நயன்தாரா
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவோ, கவுரவ வேடத்திலோ நடிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் தர்மதுரை. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் ஜோடியாக நடிக்கவில்லை, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடப் போகிறார் என்று தகவல் பரவியது. ஆனால்
இவற்றை நயன்தாரா மறுத்துள்ளார்.
"தர்மதுரை படத்துக்காக என்னிடம் யாரும் பேசவே இல்லை. ஆனால் நான் அந்தப் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முழுக்க பொய்யானது," என்று தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடித்து முடித்த இரு படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. அவற்றில் ஒன்று திருநாள்.
போக்கிரி ராஜா, காஷ்மோரா, விக்ரம் -ஆனந்த் சங்கர் படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ஒரு நேரடிப் படம் நடித்து வருகிறார்.



