Breaking News

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டரில் 6 அலகுகளாக பதிவு

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் ரிக்டரில் 6ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 அலகுகளாக கணக்கிடப்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் போர்னியோ தீவின் கடலோர நகரமான தராக்கான் என்ற இடத்தில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடப்படவில்லை. பூமியின் நெருப்பு வளையம் என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அவ்வப்போது நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்பும் நிகழ்ந்து வருகின்றன. கடந்த மாதம் கிழக்கு இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும், கடந்த நவம்பர் மாதம் ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் உண்டானது குறிப்பிடத்தக்கது.