Breaking News

இறுதிக்கட்ட போர் மீறல்கள் தொடர்பில் நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு மக்கள் ஆதரவு

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களுக்கு போருக்கூறல் தொடல்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கருத்துக கணிப்பு ஒன்றை நடாத்தியிருந்தது.
இந்த கருத்துக் கணிப்பில் நம்பகமான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்
என்று, 48.1 வீதமானோர் தெரிவித்திருந்தனர்.

இதில், நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெளியிட்ட 48.1 வீதமானோரில், பெரும்பான்மையானோர் உள்நாட்டுப் பொறிமுறைக்கே ஆதரவு வழங்கினர்.

வெளிநாட்டு பங்களிப்பில்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவாக, 43.8 வீதமானோரும், 17.1 வீதமானோர் முற்றிலும் வெளிநாட்டவர்களைக் கொண்டதான விசாரணைப் பொறிமுறைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற தமிழர்களில், 47.6 வீதமானோர், முற்றிலும் வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அமைக்க வேண்டும் என்றும், 39.7 வீதமானோர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைய, கலப்பு பொறிமுறை அமைக்க வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.