ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்க கூடிய நவீன கருவி...
தற்போதைய காலகட்டத்தில் திருமண மான தம்பதிகளுக்கு குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வருகிறது. மாற்றிய மைத்துக்கொண்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண்களில் பலரும் மகப்பேறின்மை பிரச்சினைளை எதிர்கொள்கின் றனர்.
இதில் அவர்களுக்கான ஆணு றுப்பு விறைப்புத்தன்மை குறைப்பாடு முக்கி யமானது. இதனால் ஆண்களில் முப்பது சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து குழந்தை இல்லை என்ற பின் மருத்துவர்களை நாடுகின் றனர்.பரிசோத னையில் ஆண்களின் உறுப்பு இயல்பாக இருக்கவேண்டிய விறைப்புத்தன்மையில் குறைபாடு இருப்பது கண்டறியப் படுகிறது.
இதற்கு சிகிச்சையளிப்பதற்காகவே தற்போது எரெக்டைல் டிஸ்ஃபங்சன் ஷாக்வேவ் தெரபி (Erectile Dysfunction Shock Wave Therapy) என்ற நவீன கருவியுடன் கூடிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்த சிகிச்சை முறையில் சிகிச்சையளிக் கப்படும் போது பல்வேறு இடங்களில் இந்த கருவியால் ஒலி அதிர்வு அலைகள் உருவாக் கப்படுகின்றன.
இதனால் ஆணு றுப்பில் புதிய குருதி குழாய்கள் தோன்றி, இரத்த ஓட்டத்தை விரைவுப்படுத்தி விறைப்புத் தன்மையை அதிகரிக்கிறது.இதனால் இயல்பான தாம்பத்தியம் சாத்தியப்படுத்தப்படுகிறது.
அதே தரு ணத்தில் ஆண்மைக்குறைவு காரணமாக பரிசோதிக்கப் படும் ஆணின் தன்மைக்கேற்ப இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. வாரம் இரண்டு முறை முதல் ஆறு வாரம் வரை தொடர்ச்சியாக இவ்வித சிகிச்சை யளிக்கப்படுகிறது.
இவ்வித சிகிச்சையை இன்றைய திகதியில் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.செயற்கை முறை கருவூட்டல் முறை யிலான மகப்பேற்றை விட இவ்வித சிகிச்சையினை மேற்கொள்வது நல்லது என மக்பேறின்மை மருத்துவர்கள் பரிந்துரைக் கிறார்கள்.




