Breaking News

மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு‏ மட்டக்களப்பில்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திற நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள். தின நிகழ்வும் "தடைகளே படிகளாக" எனும் மலர் வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச  செயலாளர்  எஸ்.யோகராஜா, மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, உதவி நிகழ்ச்சித்திட்ட இனைப்பாளர்  டி.பகிரதன், கெமிட் நிகழ்ச்சித்திட்ட இயக்குனர்  கே.காண்டீபன், எல்.ஒ.எச் பணிப்பாளர் கிறிஸ்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இடம்பெற்ற மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வில் மாற்றுத்திரனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு தொகையும் மாணவர்களுக்கான  கல்விக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்  தரிசனம், வாழ்வோசை, ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டனர்.