2006 ம் ஆண்டுக்கு பின்னர் எம்.பி.க்களின் சம்பளம், படிகளை அதிகரிக்கத் தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் இதர கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக, உயர்மட்டக்குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும் ஆயினும், அதிகரிப்பது எவ்வளவாக இருக்கும் என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், தகவல்கள் கூறுகின்றன. தற்போது எம்.பியொருவர் 54 ஆயிரம் ரூபாயையும், பிரதி அமைச்சரொருவர் 60 ஆயிரம் ரூபாயையும் அமைச்சர் 65 ஆயிரம் ரூபாயையும் மாத சம்பளமாக பெறுகின்றனர்.
மேலும் இவர்களுக்கு வாகன எரிபொருள்,தொலைபேசி படியும், விசேட எரிபொருள் படியும், வழங்கப்படுவது, இந்த கொடுப்பனவுகள் நீண்ட காலமாக மாற்றப்படாது உள்ளது. இதனால் எம்.பிக்கள் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்க வேண்டுமெனக் கோருகின்றனர். ஒரு நாள் அமர்வுக்கும் குழுக்கூட்டங்களுக்கும் வழங்கப்படும் ரூபா 500 வை ரூபாய் 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க வேண்டுமென சிலர் வெடுகொள்விடுக்கபட்டுள்ளது.



