Breaking News

தொழில்சார் உளநல பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - படங்கள்

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் “ வழித்துணை “ நூல் வெளியீடும் நேற்று  இடம்பெற்றது .

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் “ வழித்துணை “ நூல் வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  பிரதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது .  

இந்நிகழ்வின் போது தொழில்சார் உளநல பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . அதனை தொடர்ந்து  “ வழித்துணை “ நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்  எஸ் .மனோகரன் , கௌரவர அதிதியாக மட்டக்களப்பு  யேசு சபை மற்றும் தொழில்சார உளநல நிலைய பணிப்பாளர்  வணபிதா .போல் சற்குணநாயகம் , காத்தான்குடி உளநல வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி . எஸ் . பரமகுருநாதன் , மற்றும் வலயக்கல்வி அலுவலக கல்வி அதிகாரிகள் , வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .