இலங்கைப் பணிப்பெண்ணின் மரண தண்டனையை பிற்போடப்பட்டது சவுதிஅரேபியா
இலங்கயைச் சேர்ந்த ஆணொருவருடன் திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சட்டப்பட்டிருந்த இலங்கை பெண்ணிற்கு, கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அப்பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கையருக்கு, 100 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் மரண தண்டனையை பிற்போடப்பட்டது சவுதிஅரேபியா அரசாங்கம்.
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயம் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றத்தில், அரச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒருமித்து இத்தண்டனைக்கெதிராக தங்களது குரலை எழுப்பியிருந்தனர். இதபோது, இப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதை இலங்கை இடைநிறுத்த வேண்டுமென, பிரதியமைச்சர் அஜித் பி பிரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



