Breaking News

தொடரும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யலாம் வானிலை மையம் எச்சரிக்கை

புதிய தாழமுக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த வட கிழக்கு பருமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திருக்கிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் நவம்பர் மாதம் 108.8 செ.மீ மழை பெய்துள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள தாழமுக்கம் மற்றும் ஏற்கனவே கன்னியாகுமரியில் நிலை கொண்டுள்ள தாழமுக்க நிலைகளால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.